என் மலர்

  செய்திகள்

  ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
  X

  ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

  ராஜபாளையம்:

  ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மணல் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது23). இவரது நண்பர் செல்வ விநாயகம் (25). 2 பேரும் பால் வியாபாரம் செய்து வருகிறார்கள். இன்று 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சேத்தூரில் இருந்து ராஜபாளையத்துக்கு சென்றனர்.

  மோட்டார் சைக்கிளை செல்வவிநாயகம் ஓட்டினார். அசையா விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறியது. இதில் 2 பேரும் கீழே விழுந்தனர். விக்னேஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ராஜபாளையம் ஆஸ்பத்திரியில் 2 பேரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் விக்னேஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மரியபாக்கியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×