என் மலர்

  செய்திகள்

  ராஜபாளையம் அருகே காதல் தகராறில் 2 பேருக்கு கத்திக்குத்து
  X

  ராஜபாளையம் அருகே காதல் தகராறில் 2 பேருக்கு கத்திக்குத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜபாளையம் அருகே காதல் தகராறில் 2 பேரை கத்தியால் குத்திய இளம்பெண்ணின் தந்தையை போலீசார் தேடி வருகிறார்கள்.
  ராஜபாளையம்:

  ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் ஊரணி தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி (வயது 45). இவரது மகளை அந்த பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

  இதற்கு அந்த ஊரை சேர்ந்த இசக்கிராஜ் (26) என்பவர் உடந்தையாக இருந்ததாக மாடசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

  இதுகுறித்து மாடசாமிக்கும், இசக்கிமுத்துக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் இசக்கிராஜ், அவரது சகோதரர் காளிராஜ் ஆகிய 2 பேரும் மாடசாமி வீட்டுக்கு சென்று மீண்டும் தகராறு செய்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த மாடசாமி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து 2 பேரையும் குத்தி விட்டு தலைமறைவாகி விட்டார்.

  படுகாயம் அடைந்த இசக்கிராஜ், காளிராஜ் ஆகியோர் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  இதுகுறித்து சேத்தூர் புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மரியபாக்கியம் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மாடசாமியை தேடி வருகிறார்கள்.
  Next Story
  ×