என் மலர்

  செய்திகள்

  உத்தமபாளையம் அருகே ஜீப் உரசியதால் லாரி டிரைவர் மீது தாக்குதல்
  X

  உத்தமபாளையம் அருகே ஜீப் உரசியதால் லாரி டிரைவர் மீது தாக்குதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தமபாளையம் அருகே லாரி டிரைவரை தாக்கிய கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  உத்தமபாளையம்:

  தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ஆனைமலையான்பட்டியை சேர்ந்தவர் குமார்(வயது27). லாரி டிரைவர். இவர் கம்பத்திற்கு லாரியை ஓட்டிசென்றபோது பஞ்சரானது. இதனால் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு பஞ்சர் பார்த்து கொண்டிருந்தார்.

  அப்போது தேவாரத்தில் இருந்து வந்த ஒரு ஜீப் சாலையோரம் நின்றிருந்த குமார் மீது மோதுவது போல் உரசி சென்றது. இதனால் ஆத்திரமடைந்த குமார் ஜீப் டிரைவரை திட்டினார்.

  இதில் ஜீப்பில் வந்த 5 பேரும் குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பானது. குமாரை அவர்கள் இரும்பு கம்பி கொண்டு தாக்கியதில் படுகாயமடைந்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

  இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு லாரி டிரைவரை தாக்கியவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×