search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கம்பம் - குமுளி மலைச்சாலையில் ஒருவழிப்பாதை நாளை முதல் அமல்
    X

    கம்பம் - குமுளி மலைச்சாலையில் ஒருவழிப்பாதை நாளை முதல் அமல்

    கம்பம் - குமுளி மலைச்சாலையில் நாளை முதல் ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட உள்ளது.
    கூடலூர்:

    கேரளாவில் உள்ள சபரிமலைக்கு ஆண்டு தோறும் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டம் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் சென்று வருகிறது.

    மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் அதிகளவில் வாகனங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. எனவே கம்பம், கூடலூர், குமுளி வழிச்சாலையில் வாகனங்கள் முந்தி செல்லும் போது கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வரும்.

    எனவே போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க கடந்த சில வருடங்களாக ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் கம்பம் தபால் அலுவலகம் அருகே திருப்பி விடப்பட்டு கம்பம் மெட்டு வழியாக கேரளாவுக்கு செல்லும்.

    அதே போல் சபரிமலையில் இருந்து திரும்பி வரும் வாகனங்கள் குமுளி மலைச்சாலை வழியாக கூடலூர், கம்பம் வரும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×