என் மலர்

  செய்திகள்

  திருவெண்ணைநல்லூர் அருகே அரசு பஸ் மீது லாரி மோதி வாலிபர் பலி
  X

  திருவெண்ணைநல்லூர் அருகே அரசு பஸ் மீது லாரி மோதி வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவெண்ணைநல்லூர் அருகே அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஆந்திர மாநிலத்லை சேர்ந்த வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
  விழுப்புரம்:

  விழுப்புரத்தில் இருந்து மதுரைக்கு நேற்று இரவு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் புறப்பட்டது. நள்ளிரவு 12 மணி அளவில் அந்த பஸ் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள பேரங்கியூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் விவேகானந்தன் ஓட்டிச்சென்றார்.

  அப்போது பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பஸ்மீது மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த சாய்கிருஷ்ணா(வயது 24), ஐதராபாத்தை சேர்ந்த சரண்(27) மற்றும் விவேகானந்தன் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.

  விபத்து பற்றி அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சாய்கிருஷ்ணா பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  Next Story
  ×