என் மலர்

  செய்திகள்

  பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறப்பு நிறுத்தம்
  X

  பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறப்பு நிறுத்தம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழைநீர் வரத்து அதிகரித்ததால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
  ஊத்துக்கோட்டை:

  கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்ட ஒப்பந்தத்தின்படி கடந்த மாதம் 27-ந் தேதி முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 500 கனஅடிவீதம் திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. வார்தா புயல் கோர தாண்டவம் தொடங்கிய 11-ந் தேதி வரை வினாடிக்கு 1700 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட்டனர்.

  பொதுவாக புயல், மழை சமயங்களில் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி 11-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

  பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாய் மூலமாக 11-ந்தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

  பூண்டி ஏரியில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 23. 40 அடியாக பதிவானது. 630 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 117 கனஅடியும், ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வினாடிக்கு 64 கனஅடி வருகிறது.

  பூண்டி ஏரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழைநீர் வரத்து அதிகரித்து வினாடிக்கு 225 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. ஏரிக்கு மொத்தம் 406 கனஅடி தண்ணீர் வருகிறது. பூண்டியிலிருந்து புழல் சென்னை மெட்ரோ வாட்டர் போர்டுக்கு பேபி கால்வாய் மூலமாக வினாடிக்கு 30 கனஅடி திறந்து விடப்படுகிறது.

  கடந்த மாதம் 27-ந் தேதி முதல் இன்று வரை 19 நாட்களில் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் மற்றும் மழை நீரால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 6.35 அடியாக உயர்ந்துள்ளது. 559 மில்லியன் கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
  Next Story
  ×