என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
வார்தா புயல் எதிரொலி: தேவையான உணவு பொருட்கள் இருப்பு வைக்கவும்- தமிழக அரசு
By
மாலை மலர்11 Dec 2016 9:09 PM GMT (Updated: 11 Dec 2016 9:09 PM GMT)

வார்தா புயல் நேரத்தில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய் துறை 15 அறிவுரைகளை வழங்கியுள்ளது.
சென்னை:
சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களை ‘வார்தா’ புயல் இன்று தாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புயல் நேரத்தில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய் துறை 15 அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன் விவரம் வருமாறு:–
* ரேடியோ மற்றும் தொலைக்காட்சியினை தொடர்ந்து கவனித்து காலநிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ளலாம். இச்செய்தியை பிறருக்கு தெரிவிக்கலாம்.
* ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் அதிகாரப்பூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்க வேண்டும்.
* புயல் காற்று கதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடிவைக்க வேண்டும்.
* கடற்கரை மற்றும் நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தால் மேடான பகுதிக்கு விரைவாக வெளியேறவும், நீர் சூழ்வதற்கு முன்னரே பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றுவிட வேண்டும்.
* தங்கள் குடியிருப்பு வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்படாது எனில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வமாக கேட்டுக்கொள்ளப்பட்டால் உடனே வெளியேறவும்.
* நீர் நிலைகள் மற்றும் ஆற்று கரைகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் கனமழை காரணமாக நீர் சூழ வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர் கவனமாக இருக்க வேண்டும்.
* சமைக்காமல் உண்ணக்கூடிய பிரட், பிஸ்கெட், பழங்கள் உள்ளிட்ட உணவுகள் தேவையான அளவு இருப்பு வைக்கவும், போதுமான குடிநீர், பாதுகாப்பான பாத்திரங்கள் சேமித்து வைக்கவும்.

Next Story
×