என் மலர்
செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் 3 வீடுகளில் 31 பவுன் நகை-பணம் கொள்ளை
அரியலூர் மாவட்டத்தில் 3 வீடுகளில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்களில் 31 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் ராதா (வயது 38). இவரது வீட்டிற்குள் நேற்று இரவு மர்ம நபர்கள் புகுந்தனர். அங்குள்ள தனி அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் பரணம் கிராமத்தில் அண்ணாதுரை என்பவரது வீட்டில் புகுந்து கொள்ளையர்கள் 10 பவுன் நகை ரூ.30 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர்.
மேலும் ஆனந்தவாடி கிராமத்தில் நடந்து சென்ற அமுதா என்பவரின் 6 பவுன் தாலிச்செயினை அறுத்து கொண்டு கொள்ளையர்கள் ஓட்டம் பிடித்தனர். இரும்புலிக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் நடைபெற்ற தொடர் கொள்ளையில் 31 பவுன் நகை மற்றும் 1 லட்சம் பணத்தை விவசாயிகள் பறிகொடுத்து உள்ளனர். போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story