என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னமராவதியில் நகை கடை உரிமையாளர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை - பணம் கொள்ளை
    X

    பொன்னமராவதியில் நகை கடை உரிமையாளர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை - பணம் கொள்ளை

    பொன்னமராவதியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி பெருமாள்கோவில் வீதியைச்சேர்ந்தவர் அப்துல்லா மகன் அப்பாஸ். இவர் பொன்னமராவதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகின்றார். நேற்று காலை தங்களது வீட்டைப்பூட்டிவிட்டு திருச்சிக்கு மருத்துவமனைக்குச்சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மதியம் வீட்டிற்கு வந்துள்ளனர்.

    அப்போது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. பதறியபடி வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். வீட்டிற்குள் இருந்த 5 பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. இந்த பீரோக்களில் வைத்திருந்த ரூ.1.80 லட்சம் ரொக்கம், 4 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம், 18 பவுன் நகை மற்றும் முக்கால் கிலோ வெள்ளி கொலுசுகள் உள்ளிட்ட சுமார் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தவர் பொன்னமராவதி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று பார்வையிட்டு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகை பதிவு செய்தனர். பட்டப்பகலில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து கொள்ளை நடந்துள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×