என் மலர்
செய்திகள்

டி.வி.யில் ஜெயலலிதா உடல் அடக்க நிகழ்ச்சியை பார்த்த பெண் மரணம்
மறைமலைநகர் அருகே டி.வி.யில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் அடக்க நிகழ்ச்சியை பார்த்த பெண் திடீர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு:
மறைமலைநகரை அடுத்த கடம்பூர், படவட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிளியம்மாள் (வயது 55). அ.தி.மு.க. தொண்டர்.
நேற்று மாலை முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் அடக்க நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென கிளியம்மாளுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார்.
உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே கிளியம்யம்மாள் பரிதாபமாக இறந்தார்.
அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இச்சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story