என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர்-காஞ்சீபுரத்தில் காய்கறி வரத்து குறைவால் விலை அதிகரிப்பு
    X

    திருவள்ளூர்-காஞ்சீபுரத்தில் காய்கறி வரத்து குறைவால் விலை அதிகரிப்பு

    திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரத்தில் காய்கறி வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் குறைந்த அளவு காய்கறிகளையே வாங்கிச் சென்றனர்.

    காஞ்சீபுரம்:

    ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு மரண மடைந்தார். இதையடுத்து தமிழகம் முழு வதும் கடைகள் அடைக்கப்பட்டன. போக்கு வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை இயல்பு வாழ்க்கை திரும்பியது. காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பஸ்கள் வழக்கம் ஓடின.

    காஞ்சீபுரம் காந்தி சாலை, காமராஜர் சாலை, செங்கழுநீரோடை வீதி, ராஜவீதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் கடைகள் திறந்து இருந்தன.

    அதிகாலை முதலே தனியார் மற்றும் அரசு பஸ்கள் ஓடத் தொடங்கியது. ராஜாஜி மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் திறந்து வழக்கம் போல் இயங்கின.

    காய்கறி வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் குறைந்த அளவு காய்கறிகளையே வாங்கிச் சென்றனர். இதனால் மார்க்கெட் பகுதியில் கூட்டம் குறைவாக இருந்தது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கைத்தை விட குறைந்த அளவு காய்கறிகள் விற்பனைக்கு வந்ததால் அங்கு விலை அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து திருவள்ளூர் பகுதிகளுக்கு வியாபாரிகள் காய்கறிகளை அதிக அளவு வாங்கிவரவில்லை.

    தக்காளி, வெங்காயம் மட்டும் அவர்கள் வாங்கி வந்தனர். திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விளைந்த கீரை, வெண்டைக்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளை மட்டும் வியாபாரிகள் விற்றனர். இதனால் காய்கறி விலை அதிகமாக இருந்தது.மார்க்கெட்டுகளில் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

    Next Story
    ×