என் மலர்

  செய்திகள்

  ரெயில்வே போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து சேதம்: போலீஸ் விசாரணை
  X

  ரெயில்வே போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து சேதம்: போலீஸ் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோடு அருகே ரெயில்வே போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள்களுக்கு யாரோ மர்ம ஆசாமிகள் தீ வைத்து இருக்கலாம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ஈரோடு:

  ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் விஜயகுமார் (வயது 38).

  இவர் ஈரோடு ரெயில்வே காலனி குடியிருப்பில் வசித்து வருகிறார்.நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.

  இந்த மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. தீ மள மள என்று பிடித்து எரிந்ததது.

  இது பற்றி தகவல் கிடைத்தவுடன் ஈரோடு தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மோட்டார் சைக்கிளில் பிடித்து எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து சேதமானது.

  இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோடு சம்பத் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு முன்பு நிறுத்தியிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் திடீர் என்று தீயில் எரிந்து சேதமானது.

  இதே போல இப்போது ஈரோடு ரெயில்வே காலனி குடியிருப்பில் நிறுத்தி இருந்த போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளும் திடீர் என்று தீப்பிடித்து எரிந்து உள்ளது.

  எனவே இந்த மோட்டார் சைக்கிள்களுக்கு யாரோ மர்ம ஆசாமிகள் தீ வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  அவர்கள் யார்? எதற்காக மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×