என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை:
மத்தியில் ஆளும் மோடி அரசின் ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற பணமாற்று நடவடிக்கையைக் கண்டித்து புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் இடதுசாரிக்கட்சியினர் போலீசாரின் அச்சுறுத்தலை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணமாற்று நடவடிக்கையால் எந்த விதமான கருப்புப்பணமும் வெளிக் கொண்டுவரப்படவில்லை. மாறாக இந்த நடவடிக்கையால் சாதாரண மக்கள் தினம் தினம் செத்துக் கொண்டு இருக்கின்றனர் என்பதை விளக்கும் வகையில் பிணம்போல வேடம் தரித்த ஒருவரை அமரவைத்து நூதன ஆர்ப்பாட்டத்தை இடதுசாரிக் கட்சியினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், பகுஜன் சமாஜ்வாடிக் கட்சியினர் இணைந்து நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ(எம்எல்) கட்சியின் மாவட்டச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் செ.ம.விடுதலைக்கனல், எஸ்யுசிஐ மாவட்டச் செயலாளர் அ.கோவிந்தராஜ், பகுஜன் சமாஜ்வாடிக் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இரா.திருமுருகன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டர்.






