என் மலர்

    செய்திகள்

    புழல் சிறையில் விசாரணை கைதி தற்கொலை முயற்சி
    X

    புழல் சிறையில் விசாரணை கைதி தற்கொலை முயற்சி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புழல் சிறையில் விசாரணை கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செங்குன்றம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் பெரியசாமி (25).

    இவரை பரங்கிமலை போலீசார் 2015-ம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்தனர். பின்னர் அவரை புழல் விசாரணை சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் பெரியசாமி நேற்று இரவு தன் அறையில் இருந்த இரும்பு கட்டிலின் நட்டை கழற்றி விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து சக கைதிகள் ஜெயிலர் ஜெயராமனுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் பெரிய சாமியை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது தெரியவில்லை.

    இது குறித்து புழல் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×