என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

வங்கிகள், ஏ.டி.எம்.களில் நாளை கூட்டம் அதிகரிக்கும்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை:
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் 10-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மக்கள் கூட்டம் அதிகரித்தது.
கடந்த வாரம் வங்கிகள், ஏ.டி.எம்.களுக்கு படையெடுக்கும் மக்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் மட்டுமே பணம் பெற முடியும் என்ற அறிவிப்பால் வங்கிகளில் நீண்ட வரிசை ஏற்படுவது காணாமல் போனது.
இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நவம்பர் மாத சம்பளம் இன்றும், நாளையும் வழங்கப்படும். ஊழியர்களின் வங்கி கணக்குகளில் சம்பள தொகை போடப்பட உள்ளது.
பணம் தட்டுப்பாடாக இருப்பதாலும், ஏ.டி.எம். களில் நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டியதிருப்பதாலும், ஒரு நாளைக்கு ரூ.2,500 மட்டுமே கிடைப்பதாலும், நவம்பர் மாத சம்பளத்தை ரொக்கமாக தரும்படி ஊழியர் சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
நவம்பர் மாத சம்பளம் வழக்கம் போல வங்கி கணக்குகளில்தான் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சம்பள பணத்தைப் பெறுவதற்கு வங்கிகளிலும் ஏ.டி.எம்.களிலும் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நாளை முதல் இந்த கூட்டத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இன்னும் ஓரிரு நாட்களுக்கு வங்கிகள், ஏடி.எம்.களுக்கு வரும் மாத சம்பள ஊழியர்களை சமாளிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு வங்கிகள், ஏ.டி.எம்.களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏ.டி.எம்.களில் சுமார் 50 சதவீத ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் மூடப்பட்டு கிடக்கின்றன. திறந்து இருக்கும் ஏ.டி.எம்.களும் பணம் வைக்கப்பட்ட சிறிது நேரத்துக்குள் வறண்டு விடுகின்றன. எனவே இந்த வாரம் ஏ.டி.எம்.மை நம்பி இருப்பவர்கள் திணற வேண்டிய நிலை ஏற்படும் என்கிறார்கள்.