என் மலர்

  செய்திகள்

  ராமநாதபுரம் மாவட்ட மேம்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
  X

  ராமநாதபுரம் மாவட்ட மேம்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட மேம்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் மாவட்டத்திற்கான கணிப்பாய்வு அலுவலரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளருமான சந்திரகாந்த், மாவட்ட கலெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

  வேளாண்மைத் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, உணவுப் பொருள் வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை, பொது பணித்துறை உட்பட அனைத்து துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

  மேலும் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக பெய்துள்ள வடகிழக்கு பருவமழை அளவு குறித்து ஆய்வு செய்து, மழையளவு குறைவாக இருக்கும் பட்சத்தில், விவசாயிகள் நலனை பாதுகாத்திடும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சந்திரகாந்த் தெரிவித்தார்.

  இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அலி அக்பர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, பரமக் குடிசார் ஆட்சியர் சமீரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அரி வாசன் உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  இதை தொடர்ந்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் சந்திரகாந்த், மாவட்ட கலெக்டர் நடராஜன் ஆகியோர் மண்டபம் ஊராட்சி ஒன்றி யத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் செயல்பட்டு வரும் சுந்தரமடையான் மாதிரி தோட்டக்கலை பண்ணையினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

  மரக்கன்று பராமரிப்பு பணிகளில் புதிய தொழில் நுட்ப முறைகளை பயன் படுத்திட வேண்டும். தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் மரக்கன்று பராமரிப்பு நடைமுறைகளோடு, அண்டை மாநிலங்களில் பின்பற்றப்படும் பிற நடை முறைகளையும் கற்றறிந்து, சூழ்நிலைக்கேற்றவாறு புதுமைகளை கையாள வேண்டும் என சம்மந்தப் பட்ட அலுவலர்களுக்கு சந்திரகாந்த் அறிவுரை வழங்கினார்.

  இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தனபதி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

  Next Story
  ×