என் மலர்
செய்திகள்

சாத்தூர் அருகே தமிழ்நாடு உணவகம் திறப்பு விழா: சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர்-கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா துறை சார்பில் நெடுந்தூர பயணிகளுக்காக தமிழ்நாடு உணவகம் மற்றும் விடுதி அமைக்கப்பட்டு பல மாதங்களாக செயல்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது அது புனரமைக்கப்பட்டு புதிய பொலிவுடன் தமிழ் நாடு உணவகம் மற்றும் விடுதி தொடங்கப்பட்டது. இந்த உணவகத்தை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உணவகம் மற்றும் விடுதியை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
இந்த விழாவில் அ.தி. மு.க. ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, நகர செயலாளர் வாசன், மாநில பொதுகுழு உறுப்பினர் வேலாயுதம், பேரவை செயலாளர் முனீஸ்வரன், மேற்கு ஒன்றிய செயலாளர் தேவதுரை, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சேதுராமானு ஜம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் மாணிக்கம், சங்கராஜ், போஸ், நகராட்சி முன்னாள் கவுன்சிலர் கண்ணன், கலாதேவி முனியசாமி, முன்னாள் நகர்மன்ற துணைதலைவர் கிருஷ்ணன், விருதுநகர் இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் மச்சராஜா, வழக்கறிஞர் முருகன் உள் பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை அருள்மாரி டெவலப் பர்ஸ் நிறுவனத்தின் பங்கு தாரர்கள் இளங்கோவன், கார்த்திகைசெல்வன், குருசாமி, ராஜபிரபு ஆகி யோர் செய்திருந்தனர்.