search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீரனூர் அருகே கூட்டுறவு வங்கியில் மோதல்: செயலாளருக்கு உருட்டு கட்டை அடி
    X

    கீரனூர் அருகே கூட்டுறவு வங்கியில் மோதல்: செயலாளருக்கு உருட்டு கட்டை அடி

    கீரனூர் அருகே கூட்டுறவு வங்கியில் செயலாளருக்கும் உறுப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரும் காயம் அடைந்தனர்.
    கீரனூர்:

    கீரனூர் அருகே உள்ள கிள்ளுக்கோட்டையில் கூட்டுறவு வேளாண்மை வங்கி உள்ளது. இங்கு நாகராஜ் (வயது 51)  என்பவர் செயலாளராக இருக்கிறார். அந்தோணி லாரன்ஸ் (41) வங்கியில் உறுப்பினராக இருக்கிறார்.

    சம்பவத்தன்று லாரன்ஸ வங்கி செயலாளர் நாகராஜ்விடம் தமிழக முதலமைச்சர் உத்தரவு படி யார் யாருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் வேண்டும் என கேட்டுள்ளார்.

    அதற்கு நாகராஜ் வெளியில் உள்ள அறிவிப்பு பலகையில் உள்ளதை பார்த்து கொள்ளுமாறு கூறினார். அதற்கு லாரன்ஸ் உங்களுக்கு வேண்டியப்பட்டவர்களுக்கு தள்ளுபடி செய்து உள்ளீர்கள் என வாக்குவாதம் செய்து நாகராஜை உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த நாகராஜ் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனிடையே லாரன்ஸ் வங்கி தலைவர் செல்வம், துணைத்தலைவர் ஜோதிபாஸ் ஆகியோர் தன் கை, கால்களை பிடித்து கொண்டதாகவும், செயலாளர் நாகராஜ் பேப்பர் சீவும் கத்தியால் தன்னை தாக்கி காயம் ஏற்படுத்தியதாகவும் கூறி தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில்  சிகிச்சை பெற்று வருகிறார்.

    இருவரும் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் உடையாளிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×