என் மலர்

  செய்திகள்

  பெரியகுளம் அருகே மர்ம காய்ச்சலால் 4-ம் வகுப்பு மாணவன் பலி
  X

  பெரியகுளம் அருகே மர்ம காய்ச்சலால் 4-ம் வகுப்பு மாணவன் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரியகுளம் அருகே மர்ம காய்ச்சல் தாக்கியதில் 4-ம் வகுப்பு மாணவன் பலியானார். கடந்த மாதம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் இறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  பெரியகுளம்:

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் சாந்திநகர் காலனியை சேர்ந்தவர் சுந்தரம். விவசாயி. இவரது மகன் தெய்வேந்திரன் (வயது9). அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

  கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்ற தெய்வேந்திரனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. மாலையில் வீடு திரும்பியதும் உள்ளூரில் உள்ள டாக்டரிடம் காட்டி சிகிச்சை அளித்துள்ளனர்.

  காய்ச்சல் தணியாததால் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் முன்னேற்றம் இல்லை. இதையடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தெய்வேந்திரன் நேற்று மாலை இறந்தான்.

  பக்கத்து ஊரை சேர்ந்த சில்வார்பட்டியில் கடந்த மாதம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் இறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு காரணமாக கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×