என் மலர்

  செய்திகள்

  ஆண்டிப்பட்டி அருகே மீன்வளத்துறை அதிகாரியை மிரட்டிய வாலிபர்
  X

  ஆண்டிப்பட்டி அருகே மீன்வளத்துறை அதிகாரியை மிரட்டிய வாலிபர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டிப்பட்டி அருகே மீன்வளத்துறை அதிகாரியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

  ஆண்டிப்பட்டி:

  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணையில் மீன் வளத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் மனுநீதிச்சோழன். இவருடன் வைகை புதூரை சேர்ந்த முத்துப்பாண்டி மனைவி வேலை செய்து வருகிறார்.

  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவரை வேலைக்கு வரச்சொல்வதால் ஆத்திரம் அடைந்த முத்துப்பாண்டி போதையில் சென்று மனுநீதிச்சோழனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்பு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்ட முயன்றார்.

  தொடர்ந்து இதுபோல் வேலைக்கு வரச்சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

  இது குறித்து மனுநீதிச் சோழன் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர்.

  Next Story
  ×