என் மலர்

    செய்திகள்

    திருவண்ணாமலை மகா தீப நாளில் கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு
    X

    திருவண்ணாமலை மகா தீப நாளில் கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கார்த்திகை தீபத்திருவிழாவின்போது திருவண்ணாமலை கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு விழுப்புரம் மாவட்ட கோவில் இணை ஆணையர் வாசுநாதன் தலைமை தாங்கினார். கோவில் இணை ஆணையர்கள் பரஞ்ஜோதி, தனபால், சுதர்சனம், உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா வரவேற்றார்.

    கூட்டத்தில், கார்த்திகை தீபத்திருவிழாவின்போது கோவில் சார்பில் செய்ய வேண்டிய பணிகள், தற்போது செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறியப்பட்டன.

    பின்னர் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் எவ்வித பிரச்சினை இல்லாமல் அனைத்து திருவிழாவையும் நடத்துவது குறித்தும், பரணி தீபத்தின் போது 4 ஆயிரம் பக்தர்களை உள்ளே அனுமதிப்பது எனவும், மகா தீபத்தின் போது சுமார் 16 ஆயிரம் பக்தர்களை உள்ளே அனுமதிப்பது, ரூ.500 செலுத்தி பரணி தீபத்தை காண வரும் பக்தர்களை திருமஞ்சன கோபுரம் வழியாக செல்ல அனுமதிப்பது என கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இதில் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், தாசில்தார் பன்னீர்செல்வம், கோவில் சூப்பிரண்டு நரசிம்மன், உதவி ஆணையர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×