search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிசர்வ் வங்கியில் புதிய ரூ.500 நோட்டு வினியோகம்
    X

    ரிசர்வ் வங்கியில் புதிய ரூ.500 நோட்டு வினியோகம்

    சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் புதிய ரூ. 500 நோட்டு இன்று வினியோகம் செய்யப்பட்டது.

    சென்னை:

    வங்கி- ஏ.டி.எம்களின் மூலம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இதுவரை புழக்கத்தில் விடப்பட்டது. இதனால் ஏற்பட்ட சில்லறை தட்டுப் பாடால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ரிசர்வ் வங்கியில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பெற்றுக்கொண்டு ரூ.2000 சில்லறை நோட்டு கொடுக்கப்பட்டன. 1000 ரூபாய்க்கு இரண்டு 500 ரூபாய் நோட்டுகளும் மீதமுள்ள 1000 ரூபாய்க்கு ரூ.10 சில்லறை நாணயங்களும் வழங்கப்பட்டன.

    அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு பொது மக்களுக்கு பணம் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியில் புதிய ரூ.500 நோட்டு வாங்குவதற்காக பொதுமக்கள் வரிசையில் காத்து நின்றனர்.

    மேலும் ரிசர்வ் வங்கியில் இருந்து ஒவ்வொரு வங்கிகளுக்கும் குறைந்த அளவில் புதிய 500 ரூபாய் நோட்டு அனுப்பப்பட்டன.

    புரசைவாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைக்கு இன்று ரூ.8 லட்சம் பணம் வந்தது. இதில் ரூ. 1 லட்சம் மதிப்பிற்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    குறைந்த அளவில் பணம் வந்ததால் காத்திருந்த மக்களுக்கு ரூ.2000 வீதம் பிரித்து வழங்கப்பட்டது. இது குறித்து வங்கியின் உதவி பொதுமேளாலர் பாலராஜ் கூறுகையில், பணப்பிரச்சனையை தீர்க்க எங்களுக்கு 60 லட்சம் தினமும் தேவைப்படுகிறது. ஆனால் இன்று 8 லட்சம் மட்டுமே வந்துள்ளது. இதை வாடிக்கையாளர்களுக்கு ரூ 2000 வீதம் பிரித்து கொடுக்கிறோம்.

    புதிய 500 ரூபாய் நோட்டு வினியோகிப்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வங்கிக்கு குறைந்த அளவு பணம்வருவதால் வாடிக்கையாளர்களை சமாளிப்பது பெரும் சிரமம் ஏற்படுகிறது. இந்த பிரச்சினை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று தெரிகிறது என்றார்.

    Next Story
    ×