search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் நாளை மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    நாகர்கோவிலில் நாளை மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கண்டித்து நாளை தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எந்தவித முன்னேற்பாடும் செய்யாமலும், உரிய திட்டமிடல் இல்லாமலும் வெளியிட்ட இந்த அறிவிப்பால் மக்களின் பணத்தட்டுபாடு பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

    வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். வாசல்களில் மக்கள் காத்திருக்கிறார்கள். வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர செயலாளர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    ரேஷன் கடைகளில் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று அரசு தெரிவித்திருந்தது, வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் மக்களுக்கு தெரியாமல் இருந்தது.

    இதனால் அவர்களால் ஆதார் எண்ணை ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியவில்லை. தற்போது இவர்களின் ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக ரேஷன் கடையில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். எனவே மக்களின் நலனை கருத்தில்கொண்டு ஆதார் எண் பதிவு செய்யும் தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
    Next Story
    ×