என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

தூத்துக்குடியில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி:
தூத்துக்குடி, திருச்செந்தூரில் தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாவட்ட செயலாளர் பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று எந்தவித முன் அறிவிப்பும் இல்லாம் மத்திய அரசு திடீரென அறிவித்து உள்ளது. இதனால் பணத்தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. ஏழைஎளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், சிறு வணிகர்கள், வியாபாரிகள் அனைவரும் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல், தினமும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பல மணி நேரம் காத்து கிடக்கின்றனர்.
மத்திய அரசின் இந்த திடீர் முடிவால் பொதுமக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் இன்னல்களை சரிசெய்ய வேண்டியும், மத்திய அரசின் முடிவுக்கு எதிராகவும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. சார்பில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், சட்டமன்ற, பாராளுமன்ற நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகரம், நகரம், ஒன்றியம், பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், இளைஞர் அணி, மகளிரணி, மாணவர் அணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பொதுமக்களின் மீது சிறிதும் அக்கறை இல்லாமலும், எந்தவித முன்னேற்பாடும் இல்லாமலும், மத்திய பா.ஜ.க. அரசு ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாததாக அறிவித்தது. இதனால் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக ஏழை எளிய நடுத்தர மக்கள் தங்களது அன்றாட வேலைகளுக்கு செல்ல முடியாமல் வங்கிகள், ஏ.டி.எம். மையங்களில் காத்து கிடக்கின்றனர்.
பொதுமக்களின் அவதிக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து, தி.மு.க. சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் திருச்செந்தூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு எனது (அனிதா ராதாகிருஷ்ணன்) தலைமையில் காலை 10 மணிக்கு நடைபெறும். இதில் திரளானவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
