என் மலர்
செய்திகள்

செங்கல்பட்டில் பஸ்சில் இருந்து விழுந்து 10-ம் வகுப்பு மாணவன் பலி
பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 10-ம் வகுப்பு மாணவன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே உள்ள திருத்தேரியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் கோகுல்ராஜ் (வயது 15). செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை அவர் செங்கல்பட்டில் டியூசன் முடித்து விட்டு தாம்பரம் நோக்கி செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் கோகுல்ராஜ் படிக்கட்டில் நின்றார்.
செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தை தாண்டி சென்றபோது பஸ் பள்ளத்தில் ஏறி இறங்கியது. நிலை தடுமாறிய கோகுல்ராஜ் தவறி கீழே விழுந்தார்.
இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இன்று காலை சிகிச்சை பலனின்றி கோகுல்ராஜ் பரிதாபமாக இறந்தார்.
Next Story






