search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வியாபாரிகள் கடைகளை அடைக்க வேண்டாம்: பா.ஜனதாவினர் பிரசாரம்
    X

    வியாபாரிகள் கடைகளை அடைக்க வேண்டாம்: பா.ஜனதாவினர் பிரசாரம்

    ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாத நோட்டுக்களாக பிரதமர் மோடி அறிவித்தார். இதை எதிர்த்து நாளை போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் வியாபாரிகள் கலந்து கொள்ள வேண்டாம் என்று பா.ஜ. க. நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

    சென்னை:

    இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்க ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாத நோட்டுக்களாக பிரதமர் மோடி அறிவித்தார்.

    அதனால் நாடு முழுவதும் பணப்பிரச்சினையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதை எதிர்த்து நாளை போராட்டம் நடக்கிறது.

    இந்த போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ்., கம்யூனிஸ்டு கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகள் கலந்து கொள்கின்றன.

    இதற்கிடையில் போராட்டத்துக்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் மக்களிடம் பிரசாரம் செய்யும்படி கட்சி மேலிடம் உத்தர விட்டுள்ளது. அதன்படி கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை மேற்கு மாம்பலம், அயோத்தியா மண்டபம் பகுதிகளில் எச்.ராஜா கடை கடையாக சென்று வியாபாரிகளிடம் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    அப்போது, “கருப்பு பணத்தை ஒழிக்கும் பிரதமர் மோடியின் செயல்பாட்டுக்கு துணை நில்லுங்கள். சிறு சிறு அசவுகரியங்கள் கூடிய விரைவில் தீர்ந்து விடும்.

    கருப்பு பணத்தை ஒழிக்க அக்கறை காட்டாத கட்சிகள் நடத்தும் சுயலாப போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்காதீர்கள்” என்றார்.

    Next Story
    ×