என் மலர்

    செய்திகள்

    திருச்சி அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம்: போலீசார் விசாரணை
    X

    திருச்சி அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம்: போலீசார் விசாரணை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கொள்ளிடம் ஆற்று ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழ் அடையாளம் தெரியாத ஆண்பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெ.1 டோல்கேட்:

    திருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்று ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழ் அடையாளம் தெரியாத ஆண்பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் பிச்சாண்டார் கோவில் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர் நெ.1 டோல்கேட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் உடல் அருகே வி‌ஷ பாட்டில்கள் கிடந்ததால் அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது கொலை செய்திருப்பார்களா? அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×