என் மலர்
செய்திகள்

சமயநல்லூர் அருகே ஏ.சி.மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை
சமயநல்லூர் அருகே ஏ.சி. மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வி காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாடிப்பட்டி:
சமயநல்லூர் அருகே உள்ள பரவை சிதம்பரனார் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் சபரிகிருஷ்ணன் (வயது23), ஏ.சி. மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார்.
நேற்று மாலை இவர், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர் சபரிகிருஷ்ணன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story