என் மலர்

  செய்திகள்

  உத்தமபாளையம் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்
  X

  உத்தமபாளையம் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தமபாளையம் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தேனி:

  உத்தமபாளையம் அருகில் உள்ள மேலசிந்தலைச்சேரி நந்தகோபால் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் சவுந்தர்யா(21). உத்தமபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.

  சுரேஷ் மற்றும் அவரது மனைவி கேரளாவில் வேலை பார்த்து வருவதால் சவுந்தர்யாவை அவரது தாத்தா ரெங்கசாமி பராமரிப்பில் விட்டிருந்தனர்.

  சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிசென்ற சவுந்தர்யா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து ரெங்கசாமி கோம்பை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.

  தேனி அருகில் உள்ள பத்தரகாளிகுளம் மேற்கு தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் முனீஸ்வரன்(23). பெரம்பலூரில் உள்ள வேளாண்மை கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு கட்டு வதற்காக கொடுத்த பணத்தை முனீஸ்வரன் செலவு செய்துவிட்டார். இதனை அவரது தந்தை கண்டித்தார். இதனால் கோபித்துக்கொண்டு முனீஸ்வரன் சென்றுவிட்டார்.

  பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் மாணவனை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×