search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாநகராட்சி வரிகளை 15-ந் தேதி வரை செலுத்த அனுமதி
    X

    சென்னை மாநகராட்சி வரிகளை 15-ந் தேதி வரை செலுத்த அனுமதி

    சென்னை மாநகராட்சி வரிகளை பழைய ரூ.500 நோட்டுகள் மூலம் வருகிற 15-ந் தேதி வரை செலுத்தலாம் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    சென்னை:

    மத்திய அரசு பழைய 500 ரூபாய் நோட்டுகள் மூலம் பொதுமக்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய வரிகளை அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை செலுத்தும் வகையில் கால நீட்டிப்பு செய்துள்ளது.

    இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சியின் சொத்துவரி, தொழில்வரி உள்பட இதர வரிகளை பொதுமக்கள் பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி கடந்த 12-ந் தேதி முதல் 446 சிறப்பு கவுண்ட்டர்கள் மூலம் செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பொதுமக்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய வரிகளை பழைய 500 ரூபாய் நோட்டுகள் மூலம் அடுத்த மாதம் 15-ந் தேதி வரை செலுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதனால் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி உள்பட இதர வரிகளை பழைய ரூ.500 நோட்டுகள் மூலம் அடுத்த மாதம் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை மற்றும் அடுத்த மாதம் 12-ந் தேதி தவிர) வரை செலுத்தும் வகையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    எனவே பொதுமக்கள் அடுத்த மாதம் 15-ந் தேதி வரை பழைய ரூ.500 நோட்டுகள் மூலம் சொத்துவரி மற்றும் இதர வரிகளை செலுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×