search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடபழனி முருகன் கோவில் உண்டியல் வருமானம் ரூ.53 லட்சம்
    X

    வடபழனி முருகன் கோவில் உண்டியல் வருமானம் ரூ.53 லட்சம்

    வடபழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் வருமானமாக ரூ.53 லட்சம் கிடைத்தது. செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.33 லட்சமாகவும், ஒரே மாதத்தில் உண்டியல் காணிக்கை 2 மடங்காகவும் உயர்ந்தது.
    சென்னை:

    சென்னை வடபழனி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் இங்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது உண்டு. பக்தர்கள் வேண்டுதலுக்காக கோவிலில் காணிக்கை செலுத்தியும் வருகின்றனர். அந்தவகையில் பக் தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை தொகை ஒவ்வொரு மாதமும் எண்ணப்படும்.

    அதன்படி, வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை பணம் நேற்று எண்ணப்பட்டது. உண்டியல் பணம் எண்ணும் பணியில் அறநிலையத்துறை ஊழியர்கள், பக்தர்கள் ஈடுபட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிவரை இந்த பணி நீடித்தது. இதன் முடிவில் மொத்தம் ரூ.53 லட்சம் வருமானமாக கிடைத்தது.

    இதில் மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் உண்டியலில் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. 500 ரூபாய் நோட்டுகள் மட்டும் 3 ஆயிரம் நோட்டுகள் இருந்தது. அதாவது, ரூ.15 லட்சம் இருந்தது.

    ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 1,800 என்ற எண்ணிக்கையில் இருந்தது. அதாவது, 18 லட்சம் இருந்தது. 500, 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு மட்டும் ரூ.33 லட்சமாக இருந்தது.

    மத்திய அரசு புதியதாக அறிமுகப்படுத்திய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் உண்டியலில் போடப்பட்டிருந்தது. 60 எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் போடப்பட்டிருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாகும்.

    மற்றபடி 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளும், சில்லரைகளும் போடப்பட்டிருந்தது. உண்டியல் எண்ணிக்கை மொத்தமதிப்பில் செல்லாத நோட்டுகள் என்று அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் தான் அதிகமாக இருந்தது தெரியவந்தது.

    இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘கடந்த மாதத்தை காட்டிலும் 2 மடங்கு இந்த மாதம் உண்டியல் காணிக்கை அதிகரித்து இருக்கிறது. 500, 1,000 ரூபாய் நோட்டுகளும் இந்த முறை தான் அதிகமாக இருந்தது’ என்றனர்.
    Next Story
    ×