என் மலர்

  செய்திகள்

  கணபதி அருகே இளம்பெண் மர்ம மரணம்
  X

  கணபதி அருகே இளம்பெண் மர்ம மரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கணபதி அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது உறவினர்கள் இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் தெரிவித்தனர்.

  கோவை:

  கோவை கணபதியை அடுத்த கணபதி புதூரை சேர்ந்தவர் ஆனந்தகுமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சுஜிலட்சுமி(வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். சுஜிலட்சுமி அப்பகுதியில் உள்ள கிளீனிக் ஒன்றில் வேலை பார்த்தார். நேற்று கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆனந்தகுமார், மனைவியை கடுமையாக திட்டி உள்ளார்.

  இந்தநிலையில் இன்று காலை சுஜிலட்சுமி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுஜிலட்சுமி இறந்து விட்டதாக கூறினர்.

  இதுகுறித்து சரவணம் பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, சுஜிலட்சுமியின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் போலீசாரிடம் புகார் செய்தனர். மேலும், ஆனந்தகுமாரும் அங்கிருந்து மாயமானது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே சுஜிலட்சுமியின் சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×