என் மலர்

  செய்திகள்

  சத்தியமங்கலத்தில் வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
  X

  சத்தியமங்கலத்தில் வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்தியமங்கலத்தில் மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  சத்தியமங்கலம்:

  சத்தியமங்கலம் ராம பையனூர் சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 40). இவரது மனைவி வீரம்மாள்.

  ராமசாமிக்கு குடி பழக்கம் இருந்ததாகவும், இதனால் வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

  நேற்றும் ராமசாமி தனது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டடார். அதற்கு அவர் என்னிடம் பணம் இல்லை என்று கூறி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராமசாமி வீட்டை வீட்டு வெளியே சென்று விட்டார். வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை.

  அவரது மகன் மற்றும் உறுவினர்கள் அக்கம் பக்கம் உள்ள இடங்களில் தேடி வந்தனர். அப்போது அருகே உள்ள ஒரு காட்டின் மரத்தடியில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது அருகில் வி‌ஷ பாட்டிலும் இருந்தது.

  உடனடியாக அவரை சத்திய மங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து சத்தியமங்கலம் இனஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×