என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
நாகர்கோவிலில் டீக்கடையில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து நாசம்
By
மாலை மலர்24 Nov 2016 4:57 PM GMT (Updated: 24 Nov 2016 4:57 PM GMT)

நாகர்கோவிலில் இன்று காலை டீக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் சிதம்பரநகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 52). இவர் பொதுப்பணித்துறை ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் அவரது டீக்கடையில் இருந்து திடீர் என புகை கிளம்பியது.
இதை பார்த்த அருகில் உள்ளவர்கள் கடைக்கு சென்று பார்த்தனர். அங்கு தீ எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே மணிகண்டனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் அங்கு விரைந்து வந்து கடையை திறந்தார். மளமளவென எரிந்த தீயை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அணைக்க முயன்றனர். ஆனால் தீ மேலும் பரவியது.
இதையடுத்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் தீ அக்கம் பக்கத்து கட்டிடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த தீவிபத்தால் கடையில் இருந்த குளிர்பானங்கள், டீ பாய்லர், மற்றும் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என தெரிகிறது.
இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த தீவிபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா? வேறு ஏதும் காரணமா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×