search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் உலா வரும் காட்டெருமை
    X

    கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் உலா வரும் காட்டெருமை

    கோத்தகிரி அரவேனு பகுதியில் நாள்தோறும் வலம் வரும் ஒற்றை காட்டெருமையால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மாலை நேரங்களில் அச்சப்படுகின்றன.

    கோத்தகிரி:

    கோத்தகிரி பகுதியில் தற்போது வனவிங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பாக காட்டெருமை, சிறுத்தை, கரடி, காட்டு பன்றி போன்ற வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காட்டெருமைகளால் விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன்.

    பெரும்பாலும் வனத்தை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களில் விவசாய நிலங்கள் தேயிலை தோட்டங்கள் மற்றும் மக்கள் அதிகம் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்கு இந்த காட்டெருமைகள் சர்வசாதரனமாக வர தொடங்கி விட்டன.

    தற்போது கோத்தகிரி அரவேனு பகுதியில் நாள்தோறும் வலம் வரும் ஒற்றை காட்டெருமையால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மாலை நேரங்களில் அச்சப்படுகின்றன. இந்த நிலையில் அரவேனு அளக்கரை பெப்பேன் சோலூர்மட்டம் உட்பட பல பகுதிகளில் காட்டெருமை நடமாட்டம் அதிகமாக உள்ளன.

    குறிப்பாக அரவேனு ஆதிவாசி உண்டு உறைவிட நடுநிலை பள்ளி அருகே ஒற்றை காட்டெருமையால் தேயிலை விவசாயிகள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிப்பதற்கு அஞ்சுகின்றனர். எனவே விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி இந்த ஒற்றை காட்டெருமையை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×