என் மலர்
செய்திகள்

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பலி
தஞ்சாவூர்:
தஞ்சை பள்ளியக்ரஹாரம் அருகே கூடலூர் மணல்மேடு மேலத்தெருவை சேர்ந்தவர் கணபதி. விவசாயி. இவருடைய மகன் பிரசாந்த் (வயது 20). இவர் கோவையில் உள்ள ஓட்டல் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாந்த் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்தநிலையில், உடல் நலம் இல்லாமல் இருக்கும் தனது தந்தைக்கு மருந்து வாங்க, நண்பர் ராஜ் (19) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பிரசாந்த் கரந்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை பிரசாந்த் ஓட்டினார். ராஜ் பின்னால் அமர்ந்திருந்தார்.
கரந்தை சருக்கை பகுதியில் உள்ள சவேரியார் கோவில் தெரு அருகே சென்ற போது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், பிரசாந்த் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்த் இறந்தார்.