என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தக்கலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை - மகன் கைது
By
மாலை மலர்24 Nov 2016 12:17 PM GMT (Updated: 24 Nov 2016 5:22 PM GMT)

தக்கலை அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
குழித்துறை:
தக்கலை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 42). தொழிலாளி. இவரது மனைவி ஸ்ரீவித்யா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகனுக்கும், அவரது மனைவி ஸ்ரீவித்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே ஸ்ரீவித்யா, கணவரை பிரிந்து சென்றார். எனவே முருகன், 3 மகன்களுடன் தனியே வசித்து வந்தார்.
இந்நிலையில் முருகன் 2-வதாக செண்பகவள்ளி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் 2 பெண் குழந்தைகள் பிறந்தனர். இதில் 2-வது குழந்தைக்கு 5 வயது ஆகிறது.
முருகன், தனது முதல் மனைவியின் மகன்கள் மற்றும் 2-வது மனைவி, அவரது மகள்கள் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். நேற்று செண்பகவள்ளியின் மகள் வீட்டில் அழுது கொண்டு இருந்தார்.
அவரிடம் செண்பகவள்ளி அழுகைக்கான காரணம் குறித்து கேட்டபோது, கணவரின் முதல் மனைவியின் மகன், தன்னிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.
அதிர்ந்து போன செண்பகவள்ளி இது பற்றி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த மகனுக்கு 15 வயது ஆகிறது. அவர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நாங்கள் ஓரே வீட்டில் வசித்து வருகிறோம்.
எனது 5 வயது மகளிடம் அவளுக்கு சகோதரன் முறை வரும் சிறுவன் பாலியல் தொல்லை செய்துள்ளார். இதனை தட்டி கேட்ட போது கணவர் முருகன் என்னை மிரட்டுகிறார். எனவே இச்சம்பவத்தில் அவருக்கும் தொடர்பு இருக்கும் என்று கருதுகிறேன். எனவே இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இது பற்றி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தந்தை முருகன் மற்றும் அவரது முதல் மனைவியின் மகன் ஆகியோர் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

Next Story
×