search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலாடி அருகே பொது சிவில் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
    X

    கடலாடி அருகே பொது சிவில் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

    கடலாடி அருகே சிக்கல் பஸ் நிறுத்தம் சமீபம் கடலாடி வட்டார அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசு கொண்டுவரவுள்ள பொது சிவில் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலாடி:

    கடலாடி அருகே சிக்கல் பஸ் நிறுத்தம் சமீபம் கடலாடி வட்டார அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசு கொண்டுவரவுள்ள பொது சிவில் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலாடி வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் அப்துல் முத்தலிபு தலைமை வகித்தார். ராமநாதபுரம் மேற்கு மாவட்ட த.மு.மு.க செயலாளர் பாஹிர்அலி, எஸ்.டி.பி.ஐ. ராமநாதபுரம் மேற்கு மாவட்டத் தலைவர் முஹம்மதுஇஸாக், ராமநாதபுரம் மேற்கு மாவட்ட ம.ம.க. செயலாளர் முஹம்மதுஇக்பால், இ.யூ. முஸ்லீம் லீக் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முஹம்மது பைசல் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    த.மு.மு.க. மாநில துணை செயலாளர் பழனி பாரூக், ராமநாதபுரம் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை செயலாளர் அப்துர் ரஹ்மான், இ.யூ.முஸ்லீம் லீக் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் வருசை முஹம்மது, கடலாடி வட்டார உலாமாக்கள் சபை செயலாளர் சகீது இப்றாகிம் அருஸி, ராமநாதபுரம் மேற்கு மாவட்ட எஸ்டி.பி.ஐ. மாவட்ட பொதுச் செயலாளர் அஸ்கர்அலி ஆகியோர் கண்ட உரை நிகழ்த்தினார்கள்.

    இந்தியாவின் மதசார் பற்ற தன்மையை சீர்குழைக் கும் விதமாகவும், ‌ஷரியத் சட்டத்திற்கு மாற்றமாகவும் மத்திய அரசு கொண்டுவரத் துடிக்கும் பொதுசிவில் சட்டத்தை கண்டிப்பதாக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலாடி வட்டார அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பைச் சேர்ந்த உலமா பெருமக்கள், ஜமாத்தார்கள், இளைஞர் சங்கத்தினர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் நிறைவாக ராமநாதபுரம் மேற்கு மாவட்ட த.மு.மு.க. துணைச் செயலாளர் முஹம்மதுமுஹீதுல்லாஹ் நன்றி கூறினார்.

    Next Story
    ×