என் மலர்

  செய்திகள்

  ஆத்தூர் அருகே விபத்து: மினி லாரி மோதி பிளஸ்-2 மாணவன் பலி
  X

  ஆத்தூர் அருகே விபத்து: மினி லாரி மோதி பிளஸ்-2 மாணவன் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆத்தூர் அருகே மினி லாரி மோதி பிளஸ்-2 மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  ஆத்தூர்:

  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் ஹரிபிரசாந்த் (வயது 17).

  இவர் வீரகனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். ஹரிபிரசாத்தின் நண்பர் ஒருவர் புனர்வாசலில் வசித்து வருகிறார். அவரது தந்தை இறந்து விட்டதால் துக்கம் விசாரிக்க ஹரிபிரசாத் இன்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்களில் புறப்பட்டு சென்றார்.

  அவருடன் மற்றொரு நண்பரான வீரகனூரை சேர்ந்த பிரவீன் (வயது 17) என்பவரும் சென்றார். இருவரும் புனர்வாசலில் துக்கம் விசாரித்து விட்டு மீண்டும் காலை 8 மணி அளவில் வீரகனூருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ஹரிபிரசாத் ஓட்டினார்.

  மோட்டார் சைக்கிள் பொடவூர் புதூர் அரசு ஆஸ்பத்திரி அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த மினி லாரியும், மோட்டார் சைக்கிளும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.

  இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

  பின்னர் 2 பேரையும் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஹரி பிரசாத் பரிதாபமாக இறந்தார்.

  பிரவீனுக்கு ஆத்தூரில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இந்த விபத்து குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  ஹரிபிரசாந்தின் தந்தை அசோக்குமார் வெளிநாட் டில் வேலை பார்த்து வருகிறார். 3 மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு அவர் வந்த நேரத்தில் அவரது மகன் சாலை விபத்தில் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  ஹரிபிரசாந்த் இறந்த தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனே ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கதறியபடி வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஹரி பிரசாந்த்தின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுது புரண்டனர்.

  மேலும் அவருடன் படிக்கும் மாணவ, மாணவிகள் ஏராளமானோரும் அவரது உடலை பார்த்து கதறி அழுததால் ஆஸ்பத்திரி வளாகமே சோகத்தில் மூழ்கியது.

  Next Story
  ×