search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையத்தில் இளம்பெண்ணை மிரட்டி 3 பவுன் நகை பறிப்பு
    X

    ராஜபாளையத்தில் இளம்பெண்ணை மிரட்டி 3 பவுன் நகை பறிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராஜபாளையத்தில் இளம்பெண்ணை மிரட்டி நகை பறித்த 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகள் மகேசுவரி (வயது24). இவர், தென்காசி ரோட்டில் இளம்தோப்பு விலக்கு பகுதியில் உறவினர் ரமேசுடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள், மகேசுவரியை மிரட்டி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டனர்.

    இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் மகேசுவரி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்த 3 பேரை தேடி வருகிறார்.

    Next Story
    ×