search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை முயற்சி: அதிகாரிகள் சிக்குகிறார்கள்
    X

    ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை முயற்சி: அதிகாரிகள் சிக்குகிறார்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அதிகாரிகள் செக்ஸ் தொல்லையால் ஆயுதப்படை பெண் போலீஸ் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    எழும்பூர், நரியங்காடு குடியிருப்பில் வசித்து வருபவர் இந்துமதி (27). ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை இந்துமதி. அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மயக்க நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    உயர் அதிகாரிகள் தனது அழகை வர்ணித்து செக்ஸ் தொல்லை கொடுப்பதாகவும், பணி மாறுதல் கேட்டும் கொடுக்க மறுக்கின்றனர் என்றும் இந்துமதி குற்றம் சாட்டி இருந்தார்.

    இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையடுத்து இந்து மதிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த அதிகாரிகள் பற்றிய விபரங்களை தனிப்படையினர் ரகசியமாக விசாரித்து வருகிறார்கள்.

    எனவே செக்ஸ் தொல்லை கொடுத்த அதிகாரிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×