search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கிகள், தபால் நிலையங்களில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு இன்று கடைசி நாள்
    X

    வங்கிகள், தபால் நிலையங்களில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு இன்று கடைசி நாள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வங்கிகள், தபால் நிலையங்களில் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு இன்று கடைசி நாள் ஆகும். ரிசர்வ் வங்கியில் மார்ச் மாதம் வரை மாற்றலாம்.
    சென்னை:

    செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கி, தபால் நிலையங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்வதற்கு முதலில் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இந்த உச்ச வரம்பு ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டது. திடீரென்று அந்த தொகை ரூ.2,000 ஆக குறைக்கப்பட்டது.

    பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு ஒருவர் மீண்டும், மீண்டும் வருவதை தடுக்க விரலில் அடையாள ‘மை’ வைக்கும் திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

    இந்தநிலையில் வங்கிகள், தபால் நிலையங்களில் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்காக மத்திய அரசு அறிவித்திருந்த காலக்கெடு இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது. இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    செல்லாத 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து பண பரிமாற்றம் செய்வதற்கு வியாழக்கிழமை (இன்று) கடைசி நாள் ஆகும்.

    அதே சமயத்தில் தங்கள் கைவசம் உள்ள செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தங்களது வங்கி கணக்கில் டிசம்பர் மாதம் 30-ந்தேதி வரை பொதுமக்கள் செலுத்தலாம். வங்கி கணக்கு இல்லாதவர்கள் புதிதாக கணக்கு தொடங்கி, செல்லாத ரூபாய் நோட்டுகளை ‘டெபாசிட்’ (வைப்பு) செய்யலாம்.

    செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக, 2-வது சந்தர்ப்பம் அரசு கொடுக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் அதுதொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

    அரசின் அறிவிப்பு வெளியாகும் வரைக்கும் காத்திருக்காமல் இன்றே மாற்றிக் கொள்ளலாம் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி வரையிலும் ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம்.

    இன்று செல்லாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றுவதற்கு கடைசி நாள் என்பதால் வங்கிகளில் கூட்டம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரசு ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், பால் அங்காடி, நுகர்வோர் கூட்டுறவு கடைகள், தகன மேடை, ரெயில் டிக்கெட்டுகள், அரசு பஸ் போக்குவரத்து, விமான டிக்கெட், மின்சாரம், தண்ணீர் கட்டணம், சமையல் கியாஸ் சிலிண்டர்கள், புராதன இடங்களுக்கான நுழைவுச்சீட்டுகள் ஆகியவற்றுக்கு செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு சலுகை அறிவித்தது.

    மேலும் சுங்கச்சாவடிகளில் சுங்கவரி செலுத்துவதும் ரத்து செய்யப்பட்டது. இந்த சலுகைகள் 2 முறை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே மத்திய அரசு சலுகைகள் அறிவித்திருந்தாலும், அதை முழுமையாக மக்களுக்கு வழங்க பலர் முன்வரவில்லை. சில்லரை தட்டுப்பாடு நிலவுவதால் அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் கண்டக்டர்கள் பழைய ரூபாய் நோட்டுகளை பயணிகளிடம் வாங்க மறுத்து வருகிறார்கள்.

    இதேபோல ஒரு சில சேவைகளிலும் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கு மறுத்து வருகின்றனர். செல்லாத ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதற்கான காலக்கெடு இன்று (வியாழக்கிழமை) உடன் முடிவடைகிறது.

    ஆனால் பணப்பரிமாற்ற பிரச்சினையும், பணத்தட்டுப்பாடும் தொடர்ந்து நீடித்து வருவதால் பழைய நோட்டுகளை பயன்படுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    Next Story
    ×