என் மலர்

    செய்திகள்

    குடிபோதையில் கண்டக்டரை தாக்கிய ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி கைது
    X

    குடிபோதையில் கண்டக்டரை தாக்கிய ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவில்பட்டியில் குடிபோதையில் கண்டக்டரை தாக்கிய ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அறிஞர் அண்ணா நகரை சேர்ந்தவர் செல்லையா (வயது 59). இவர் மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று இரவு செல்லையா தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டிக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பஸ் கண்டக்டர் கோவில்பட்டி ராஜீவ்நகரை சேர்ந்த சவரிராஜன் (55) என்பவருக்கும் செல்லையாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோவில்பட்டி கால்நடை ஆஸ்பத்திரி அருகே பஸ் வந்த போது செல்லையா, கண்டக்டர் சவரிராஜனை தாக்கினாராம். அப்போது செல்லையா குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சவரிராஜன் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்லையாவை கைது செய்தனர்.

    Next Story
    ×