என் மலர்
செய்திகள்

கம்பம் பகுதியில் 42 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
கம்பம்:
தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. இதனை தடுக்க காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். உத்தம பாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அண்ணாமலை தலைமையில் கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்- இன்ஸ்பெக்டர் இதிரிஸ்கான் மற்றும் போலீசார் கம்பம் -கோம்பை ரோடு நாககன்னியம்மன் கோவில் அருகில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஆட்டோ டிரைவர் பிரபு, துரைபாண்டி ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கேரளாவுக்கு கஞ்சா கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் தகவலின் பேரில் கம்பம்மெட்டுச்சாலை சிலுவை கோவில் அருகே காரை மடக்கி சோதனையிட்டபோது 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
காரில் வந்த அபுதாலிரசித், ஹமீது ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.