என் மலர்

  செய்திகள்

  சுங்கச்சாவடி கட்டணம் ரத்து: அசுர வேகத்தில் விபத்தை ஏற்படுத்தும் லாரிகள்
  X

  சுங்கச்சாவடி கட்டணம் ரத்து: அசுர வேகத்தில் விபத்தை ஏற்படுத்தும் லாரிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுங்கச்சாவடி கட்டணம் ரத்து செய்யப்பட்டதால் அதிகளவு மணல் லாரிகள் மின்னல் வேகத்தில் விபத்தை ஏற்படுத்தி செல்கின்றன.

  வடமதுரை:

  நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு முக்கிய இடங்களில் பழைய நோட்டுகளை மாற்ற முடியாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

  இதனையடுத்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நாள் தோறும் சுமார் ரூ.75 கோடி வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

  சுங்க கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதிகளவு மணல் லாரிகள் தேசிய நெடுஞ்சாலை வழியாக வருகின்றன. தமிழகத்திலேயே திருச்சியில் இருந்துதான் மணல் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கிறது. சுங்க வரி கட்டணத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள மணல் லாரி உரிமையாளர்கள் வழக்கத்துக்கு அதிகமாக மணல் கொண்டு வருகின்றனர். இந்த மணல் லாரிகள் மின்னல் வேகத்தில் வந்து விபத்துகளையும் ஏற்படுத்தி செல்கிறது. நேற்று அய்யலூர் அருகில் உள்ள கல்பட்டிசத்திரம் சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த லாரி மீது மணல் லாரி மோதியதில் லாரியின் முன் பகுதி சேதமடைந்தது.

  டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தப்பி ஓடிய மணல் லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

  Next Story
  ×