என் மலர்

    செய்திகள்

    தமிழ்நாட்டுக்கு 500 ரூபாய் நோட்டு எப்போது வரும் என்பதை தெரிவிக்க முடியாது: ஐகோர்ட்டில் ரிசர்வ் வங்கி தகவல்
    X

    தமிழ்நாட்டுக்கு 500 ரூபாய் நோட்டு எப்போது வரும் என்பதை தெரிவிக்க முடியாது: ஐகோர்ட்டில் ரிசர்வ் வங்கி தகவல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழ்நாட்டுக்கு 500 ரூபாய் நோட்டு எப்போது வரும் என்பதை தெரிவிக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வக்கீல் ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், செஞ்சியை சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    ‘ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த 8-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். செல்லாத ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொள்ளும்படியும் அவர் கூறினார்.

    ஆனால், எங்கள் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நான் உட்பட பல விவசாயிகள் கணக்கு வைத்துள்ளோம். இந்த கூட்டுறவு வங்கிக்கு ரிசர்வ் வங்கி பணம் தராததால், எங்களால் எங்கள் பணத்தை மாற்ற முடியவில்லை’.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘புதிய ரூபாய் நோட்டுக்களை பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இது சமுதாயத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. எனவே, இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் ரூ.500 நோட்டு புழக்கத்துக்கு வரவேண்டும்.

    அது வந்தால்தான், பிரச்சினை தீரும். எனவே, எப்போது ரூ.500 நோட்டு தமிழகத்தில் புழக்கத்தில் வர போகிறது? என்பதை ரிசர்வ் வங்கி தெரியப்படுத்த வேண்டும் என்று கடந்த புதன்கிழமை உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, ‘ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மட்டுமே வழக்கு தொடர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு வங்கிக்கு பணம் தராததால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது. அது உண்மை இல்லை.

    நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, ‘கிஸான்’ கார்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி விவசாயிகள், வங்கியில் இருந்து ரூ.24 ஆயிரம் வரை எடுக்க முடியும்’ என்று கூறினார்.

    ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வக்கீல், ‘கூட்டுறவு வங்கிகளுக்கு பணம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ளது. போதுமான தொகையை வங்கிகளுக்கு கொடுக்கத்தான் செய்கிறோம். மேலும், ரூ.500 நோட்டுகள் எப்போது தமிழகத்துக்கு வரும் என்று வெளிப்படையாக சொல்ல முடியாது. பாதுகாப்பு காரணத்தினால், இதை சொல்ல இயலாது’ என்று கூறினார்.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ‘ஆமாம். வெளிநாட்டில் மட்டுமல்ல உள்நாட்டிலும் தேச விரோதிகள் இருக்கத்தான் செய்கின்றனர். எனவே, இந்த பதிலை ஏற்றுக்கொள்கிறேன். அதேநேரம், ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பால் 2 அல்லது 3 நாட்களுக்கு மக்களுக்கு கடும் பாதிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பினால், கடந்த 8 நாட்களுக்கு மேலாக பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனரே? இந்த பிரச்சினை இப்போது முடிவுக்கு வராது போல தெரிகிறது.

    நாட்டின் நலன் கருதி முடிவுகள் எடுப்பதற்கு முன்பு திட்டமிட வேண்டும். ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை செய்து ஒரு திட்டத்தை உருவாக்கியிருக்க வேண்டும். அதை மத்திய அரசு செய்யவில்லை. அதனால், பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்’ என்று கருத்து தெரிவித்தார்.

    பின்னர், இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தான் வழக்கு தொடர வேண்டும் என்ற உத்தரவு உள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கிறேன்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.
    Next Story
    ×