என் மலர்
செய்திகள்

விருதுநகரில் டாஸ்மாக் அதிகாரி வீட்டில் 11 பவுன் நகை கொள்ளை
விருதுநகரில் டாஸ்மாக் அதிகாரி வீட்டில் 11 பவுன் நகையை கொள்ளை யடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது34). இவர் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு பால முருகன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்னை சென்றுவிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் பாலமுருகன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவின் கதவை உடைத்து அதிலிருந்த 11¼ பவுன் நகையை திருடி கொண்டு தப்பினர்.
வீடு திரும்பிய பால முருகன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் பாண்டியன்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Next Story