என் மலர்

  செய்திகள்

  பொன்னேரி அருகே குப்பையில் கிழித்து வீசப்பட்ட ரூ. 500, 1000 நோட்டுகள்
  X

  பொன்னேரி அருகே குப்பையில் கிழித்து வீசப்பட்ட ரூ. 500, 1000 நோட்டுகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொன்னேரி அருகே குப்பையில் கிழித்து வீசப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

  பொன்னேரி:

  ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் அதனை கருப்பு பணமாக பதுக்கி வைத்துள்ளவர்கள் மாற்ற முடியாமல் உள்ளனர்.

  பல இடங்களில் ரூபாய் நோட்டுக்களை குப்பைகளில் வீசி வருகிறார்கள். இதே போல் பொன்னேரி அருகே குப்பையில் கிழித்து வீசப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பொன்னேரியை அடுத்த கும்பங்குளம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள மைதானத்தில் கொட்டப்படுவது வழக்கம்.

  இந்த நிலையில் அங்கு கொட்டப்பட்ட குப்பையில் ஏராளமான ரூ. 1000, 500 நோட்டுகள் துண்டு துண்டாக கிழிந்து கிடந்தது.

  இதனை கண்ட பொது மக்கள் சிலர் கிழிந்த நோட்டுகளை அள்ளிச் சென்றனர். பல நோட்டுகள் சேர்க்க முடியாத அளவுக்கு சிறிதாக கிழிக்கப்பட்டு இருந்தன. எவ்வளவு பணம் வீசப்பட்டு இருந்தது என்று தெரிய வில்லை.

  இதுபற்றி அறிந்ததும் ஏராளமானோர் அந்த குப்பை கிடங்கில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

  ரூபாய் நோட்டுகளை வீசியது யார்? வேறு ஏங்கேனும் இதுபோல் வீசப்பட்டு உள்ளதா? என்று அப்பகுதி மக்கள் ஏராளமானோர் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தினமும் குப்பை கிடங்கில் ரூபாய் நோட்டை தேடுவதற்காக ஒரு கும்பல் சுற்றியும் வருகிறது.

  Next Story
  ×