என் மலர்

  செய்திகள்

  ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி அளிக்க வேண்டும்: சரத்குமார் கோரிக்கை
  X

  ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி அளிக்க வேண்டும்: சரத்குமார் கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி அளிக்க வேண்டும் என்று சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
  சென்னை:

  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்தது வருத்தத்தை அளிக்கிறது. கருப்பு பண விவகாரத்தில் பரபரப்பாகவும், யாரும் எதிர்பார்க்காத விதத்தில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மோடி அரசு, தமிழ்நாட்டின் பாரம்பரியமான வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கலாமே?.

  கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு முக்கியத்துவம் அளித்த மத்திய அரசு, அதே முக்கியத்துவத்தை ஜல்லிக்கட்டுக்கு அளித்து போட்டிகளை நடத்த நிரந்தர அனுமதி அளிக்க வேண்டும். வரும் 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டுடன் பொங்கல் விழாவை கொண்டாடும் விதமாக அனுமதி அளிக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  Next Story
  ×