என் மலர்
செய்திகள்

குத்தாலம் அருகே இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே ஆலங்குடி ஊராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆலங்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் உத்திராபதி தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர்கள் அப்துல்ஹாதி, சிவசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊராட்சியின் தேவைகளான குடிநீர், காலனி வீடுகளை புதுப்பித்து தரக்கோருதல், நூறு நாள் வேலை சம்பளத்தை வழங்க வலியுறுத்தல் மற்றும் டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு 30 ஆயிரம், விவசாய தொழிலாளிகளுக்கு 15 ஆயிரம் நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் கணபதி, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






